தொழிலாளி வீட்டை சூறையாடிய காட்டுயானைகள்
தொழிலாளி வீட்டை சூறையாடிய காட்டுயானைகள்
கூடலூர்
கூடலூர் அருகே தேவாலா, நாடுகாணி ஆகிய பகுதிகளில் அட்டகாசம் செய்த காட்டுயானை கூட்டம், கேரள வனப்பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்தது. தொடர்ந்து புளியம்பாரா பகுதியில் பெண் தொழிலாளி வீட்டை உடைத்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கூடலூர் அருகே பாடந்தொரை, மூச்சிக்கண்டி பகுதியில் அந்த காட்டுயானைகள் முகாமிட்டன. தொடர்ந்து சுகுமாறன் என்பவரது வீட்டை உடைத்து சூறையாடியது. அப்போது அவர் மற்றும் குடும்பத்தினர் பயத்தில் பின்வாசல் வழியாக வெளியே ஓடி தப்பித்தனர். பின்னர் வீட்டில் இருந்த அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை காட்டுயானைகள் தின்றன. மேலும் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தின. நேற்று அதிகாலைக்கு பிறகு அங்கிருந்து காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.