தூத்துக்குடியில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் திரேஸ்புரம் கடற்கரையில் நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன
தூத்துக்குடியில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் திரேஸ்புரம் கடற்கரையில் நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்காள விரிகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழக கடற்கரை பகுதியில் நேற்று முதல் இன்று(சனிக்கிழமை) வரை 40 கி.மீ. முதல் 60கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடற்கரை பகுதியில் 40கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தூத்துக்குடியில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் திரேஸ்புரம் கடற்கரையில் நாட்டுப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.