கிராம மக்கள் சட்ட விழிப்புணர்வு பெற பிரசார ஊர்தி வாகனம்; மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் தேசிய அளவில் ஜனாதிபதியால் 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி முதல் கிராம மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Update: 2021-10-29 09:01 GMT
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சட்ட விழிப்புணர்வு அனைத்து கிராமங்களில் சட்ட தன்னார்வலர்களை கொண்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு நேற்று திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் இணைந்து கிராமப்புற மக்கள் சட்ட அறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு பெற தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறையின் பிரசார வாகனம் மூலமாக பிரசார ஊர்தி தொடக்க விழா நடத்தப்பட்டது. இதனை திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வ சுந்தரி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்