உறவினர் வீட்டில் நகை திருடிய தம்பதி கைது
உறவினர் வீட்டில் நகை திருடிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே அணைத்தலையூர் முப்பிடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சியம்மாள். சில ஆண்டுகளுக்கு முன்பு இவரின் கணவர் இறந்து விட்டார். இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். பேச்சியம்மாள் விவசாய வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சாவியை அங்குள்ள ஒரு இடத்தில் வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ இரும்பு கம்பியால் உடைக்கப்பட்டு, 4 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கங்கைகொண்டான் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்தார்.
விசாரணையில், நகையை திருடியது பேச்சியம்மாளின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த மரிய அஸ்வினி (26), அவரது கணவர் சிவா கண்ணன் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து, 4 பவுன் தங்கச்சங்கிலியை மீட்டனர்.