வரதட்சணை கேட்டு மிரட்டியதாக கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

வரதட்சணை கேட்டு மிரட்டியதாக கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-10-28 19:09 GMT
கரூர், 
கரூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி பகுதிக்குட்பட்ட இந்திரா நகரை சேர்ந்தவர் பாரதி (வயது 34). இவருடைய மனைவி அமுதா (29). இந்தநிலையில் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அமுதா புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு எனக்கு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில், எனது கணவர் பாரதி, மாமியார் பழனி அம்மாள் (59) மற்றும் கணவரின் சகோதரி சசிகலா (42) ஆகியோர் கடந்த 6 மாதங்களாக வரதட்சணை கேட்டு மிரட்டி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்