ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி
உடுமலையில் வங்கியின் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை முகமூடி கொள்ளையன் கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால் கொள்ளையன் தப்பி ஓடினான். இதனால் எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது.
உடுமலை
உடுமலையில் வங்கியின் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து பணத்தை முகமூடி கொள்ளையன் கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால் கொள்ளையன் தப்பி ஓடினான். இதனால் எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது.
ஏ.டி.எம்.மையம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைஏரிப்பாளையம் பகுதியில் உள்ள திருப்பூர் சாலையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்.மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம்.மையத்தில் இருந்து நேற்று அதிகாலை திடீரென்று அலாரம் ஒலித்துள்ளது. இந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அப்போது அந்த ஏ.டி.எம்.மையத்தில் இருந்து முகமூடி அணிந்த ஒருஆசாமி ஓடினான். உடனே இதுகுறித்து உடுமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் கிடைத்ததும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.வங்கி அதிகாரிகளும் அங்கு வந்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த ஏ.டி.எம்.மையத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
கொள்ளை முயற்சி
அப்போது அதிகாலை சுமார் 2¼மணிக்கு முகமூடி அணிந்தஆசாமி ஏ.டி.எம்.மையத்திற்குள் நுழைந்து ஏ.டி.எம்.எந்திரத்தை கம்பியால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த ஆசாமியை உருவத்தை அடிப்படையாகக்கொண்டு அந்த மூகமூடி கொள்ளையனை உடுமலைபோலீசார் தேடிவருகின்றனர்.அந்த முகமூடி கொள்ளையன், எந்திரத்தை உடைக்க முடியாத நிலையில் அலாரம் ஒலித்ததால் ஏ.டி.எம்.மில் இருந்த பணம் தப்பியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.