சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 2 பேர் கைது
தாயில்பட்டி அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள வெற்றிலையூரணி பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார் கிடைத்தது. இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் போலீசார் வெற்றிலையூரணி, அரசரடி, தெற்குதெரு, தெற்கு ஆணைகூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் சோதனை நடத்தினர்..அப்போது வெற்றிலையூரணியை சேர்ந்த புனித ராஜ் (வயது 40) தெற்குஆணைகூட்டத்தில் நாராயணன் (50) ஆகியோர் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது 2 பேரையும் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி கைது செய்து அவர்களிடமிருந்து தலா 30 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்தார்.