ராமேசுவரம்,
பாம்பன் ரெயில் தூக்குப் பாலம் கப்பல்கள் கடந்து செல்வதற்காக நேற்று பகல் 12.30 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து துறைமுக அதிகாரிகளின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான புதிய 3 ரோந்து கப்பல்களும் தூக்குப்பாலத்தை ஒன்றன்பின் ஒன்றாக கடந்து மேற்கு வங்க மாநிலம் நோக்கி சென்றன. இதேபோல் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு சொந்தமான அதிவேக ரோந்து கப்பல் ஒன்று பாக் ஜலசந்தி பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியின் ரோந்து பணிக்காக தூக்குப் பாலத்தை கடந்து தென் கடல் பகுதிக்கு வந்தன.