தொண்டி,
திருவாடானை தாலுகா, எஸ்.பி. பட்டினத்தை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவரது மனைவி மெகர் நிஷா (வயது26). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் மெகர் நிஷாவிற்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் அப்துல் மஜீத் அவரது மனைவி மெகர் நிஷா மற்றும் இவர்களது உற வினர்கள் சிலருடன் கடந்த 25-ந்தேதி எஸ்.பி.பட்டினத்தில் இருந்து ஒரு காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின்னர் அங்கு உள்ள ஒரு தனியார் விடுதியில் அனைவரும் தங்கி இருந்துள்ளனர். 26-ந் தேதி அதிகாலை நிஷா விற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடனே கணவர் மற்றும் அவருடைய உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் எஸ்.பி. பட்டி னத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.இது பற்றிய தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் எஸ்.பி. பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய் துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மெகர்நிஷாவின் உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக எஸ்.பி.பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மெகர்நிஷாவிற்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆகியுள்ளதால் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. சேக் மன்சூர் கர்ப்பிணி பெண் இறப்பு குறித்து அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்.