வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-28 17:38 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல்

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது. அதன்படி வீடு, வீடாக சென்று டெங்கு கொசுப்புழு அழித்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அலமேலுமங்காபுரம் ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வெளிமாநிலம், வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். அவர்களில் காய்ச்சல் பாதித்தவர்களும் பலர் வருகின்றனர். அவர்களை கண்காணிக்கும்படி சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

பரிசோதனை

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அவர்களின் ரத்தமாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. கடுமையான காய்ச்சல் 4 நாட்களுக்கு மேல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மேலும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் தீவிர சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் வரப்பெற்ற முடிவுகளில் பாகாயத்தில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்