ரூ.7 லட்சத்தில் கழிவுநீர் வாய்க்கால்

பழைய வத்தலக்குண்டுவில் ரூ.7 லட்சத்தில் கழிவு நீர் வாய்க்கால் கட்டப்படும் என்று வத்தலக்குண்டு ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-10-28 16:53 GMT
வத்தலக்குண்டு: 

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி முருகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய ஆணையாளர் ஜெயச்சந்திரன் வரவேற்றார். 


கூட்டத்தில் பழைய வத்தலக்குண்டுவில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க ரூ.7 லட்சம் நிதி ஒதுக்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் விஜயகர், சக்திவேல், அறிவி, பிச்சை, ஜீவகன், செல்லம்மாள், முருக பாரதி, பெனினா தேவி, சூசை ரெஜி ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் மகாராஜன் நன்றி கூறினார்

மேலும் செய்திகள்