வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பதுக்கி வைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2021-10-28 16:32 GMT
ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியில் வெளி மாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று மாலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு விசாரணை மேற்கொண்டபோது அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் 25 கிலோவாக சிறுசிறு மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகல் பறிமுதல் செய்து திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து வெளி மாநிலத்திற்கு கடத்தும் நபர்கள் குறித்து வருவாய்த் துறையினரும், போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்