கல்லூரி மாணவி தற்கொலை

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-28 16:15 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மகள் பாரதி (வயது 18). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு படித்து வந்தார். பாரதி கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 

இதனால் மனம் உடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்