எந்திரங்களின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

வெங்காய சாகுபடியில் எந்திரங்களின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-10-28 15:59 GMT
திண்டுக்கல்:

காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையமும், பெங்களூரு தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மையமும் இணைந்து விவசாயிகளுக்கு வெங்காய சாகுபடிக்கான எந்திரங்களின் பயன்பாடு மற்றும் அறுவடைக்கு பின் வெங்காயத்தை சேமித்து பராமரித்தல் குறித்த தொழில்நுட்ப பயிற்சி முகாமை பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடத்தியது.

இதற்கு பல்கலைக்கழக (பொறுப்பு) துணைவேந்தர் ரங்கநாதன் தலைமை தாங்கி பேசுகையில், விவசாயிகள் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப விவசாய பொருட்களின் உற்பத்தியை பெருக்க புதுப்புது தொழில் நுட்பங்களை தெரிந்துகொண்டு அதனை பயன்படுத்த வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு பண்ணை கருவியின் செயல்பாடுகள் பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் பெங்களூரு தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி செந்தில்குமரன், காந்திகிராம பல்கலைக் கழக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறையின் இயக்குனர் தமிழ்மணி மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பலர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். முகாமில் வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்