தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்

Update: 2021-10-28 14:18 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள உமரிக்கோட்டையை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் நாகராஜ் (வயது 20). இவர் ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரி விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரங்களில் கட்டிட வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் தூத்துக்குடி எழில்நகரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் கட்டிட பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு ஒரு கம்பியை தூக்கிய போது, எதிர்பாராதவிதமாக அந்த கம்பி, அருகில் சென்று கொண்டு இருந்த மின்சார ஒயரில் பட்டது. இதில் நாகராஜ் மீது மின்சாரம் தாக்கியது. பலத்தகாயம் அடைந்த நாகராஜை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்