டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் சாவு

டேங்கர் லாரி கவிழ்ந்து டிரைவர் சாவு

Update: 2021-10-28 13:44 GMT
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியம் குளத்துபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 29). இவர் நேற்று முன்தினம் இரவு புளியமரத்து பாளையம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள வளைவில் திரும்பும்போது லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. 
இந்த விபத்தில் லாரியின் அடியில் சிக்கிய பிரகாஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பிரகாசின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு  செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்