ஓய்வூதியம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்; செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
ஓய்வூதியம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அடுத்த மாதம் 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநில ஓய்வூதிய இயக்குனரால் நடத்தப்பட உள்ளது.
அடுத்த மாதம் 5-ந்தேதிக்குள்
ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின் அதற்கான முறையீட்டினை 3 நகல்களில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு அடுத்த மாதம் 5-ந்தேதிக்குள் அனுப்பி வைக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.
இந்த கூட்டத்தில் முறையீடுகளை அளிக்கும் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர் சங்கங்களின் சார்பாக ஒரு சங்கத்திற்கு ஒரு நிர்வாகி வீதம் கலந்துகொள்ளலாம். 5-11-2021-க்குள் பெறப்படும் முறையீடுகளின் மீது குறைகளை அறிக்கையினை சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து பெற்று 26-11-2021 அன்று நடைபெறும் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நடவடிக்கை விவரம் தெரிவிக்கப்படும்,
எனவே, ஓய்வூதியர்கள் தங்களது முறையீடுகளை அடுத்த மாதம் 5-ந்தேதிக்குள் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்ட விண்ணப்பம் கடித உறையில் குறிப்பிட்டு மாவட்ட கலெக்டர். செங்கல்பட்டு 603 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.