ரிப்பன் மாளிகை நிரந்தரமாக ஜொலிக்கும் வகையில் ரூ.1.75 கோடியில் வண்ண விளக்குகள்

எழில்மிகு சென்னை திட்டத்தின்கீழ், ரிப்பன் மாளிகை நிரந்தரமாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட உள்ளது.

Update: 2021-10-28 06:22 GMT
பெருநகர சென்னை மாநகராட்சியில் சிங்கார சென்னை 2.o திட்டம் தொடங்கப்பட்டு தூய்மைச் சென்னை, பசுமைச் சென்னை, நீர்மிகு சென்னை, எழில்மிகு சென்னை, நலமிகு சென்னை, கல்வி மிகு சென்னை ஆகிய தலைப்பின்கீழ் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், எழில்மிகு சென்னை திட்டத்தின்கீழ், ரிப்பன் மாளிகை நிரந்தரமாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் நிரந்தரமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னையின் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் ரிப்பன் மாளிகை நாள்தோறும் ஜொலிக்கும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் ரூ.1.75 கோடியில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. சுதந்திர தினம், குடியரசு தினம் சிறப்புத் தினங்களில் அதற்கேற்றார்போல் வண்ணங்களில் ஒளிர செய்யப்படும். இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்