தலைவாசல் அருகே சலூன்கடையில் வாலிபருக்கு முடிவெட்ட மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு-கடைக்காரர் உள்பட 3 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு

தலைவாசல் அருகே சலூன்கடையில் வாலிபருக்கு முடிவெட்ட மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடைக்காரர் உள்பட 3 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-10-27 23:08 GMT
தலைவாசல்:
தலைவாசல் அருகே சலூன்கடையில் வாலிபருக்கு முடிவெட்ட மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடைக்காரர் உள்பட 3 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சலூன்கடை
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஊனத்தூர் கிராமத்தில் சிறுவாச்சூரை சேர்ந்த லோகநாதன் என்பவர் சலூன்கடை நடத்தி வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் (26) என்பவர் முடி வெட்டுவதற்காக லோகநாதன் கடைக்கு வந்தார்.
அப்போது உங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு முடி வெட்ட மாட்டேன் என்று லோகநாதன் கூறியதாக தெரிகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதை அறிந்த கடை அமைந்துள்ள கட்டிட உரிமையாளர் அன்னக்கிளி மற்றும் பழனிவேல் ஆகியோர் பூவரசனிடம் உங்களுக்கு முடிவெட்ட முடியாது என்று கூறியதாக தெரிகிறது.
3 பேர் மீது வழக்கு
இதுகுறித்து பூவரசன் தலைவாசல் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பூவரசனுக்கு முடி வெட்ட மறுத்த சலூன்கடை உரிமையாளர் லோகநாதன், அன்னக்கிளி, பழனிவேல் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் தலைவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்