ரவுடிகள் வீடுகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் சோதனை

புதுவையில் இரட்டை கொலை எதிரொலியாக ரவுடிகள் வீடுகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் சோதனை மேற்கொண்டார்.

Update: 2021-10-27 19:36 GMT
புதுச்சேரி, அக்.28-
புதுவையில் இரட்டை கொலை எதிரொலியாக ரவுடிகள் வீடுகளில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் சோதனை மேற்கொண்டார்.
வெடிகுண்டு வீசி கொலை
புதுவை வாணரப்பேட்டையில் ரவுடி பாம் ரவி, காண்டிராக்டர் அந்தோணி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். 
புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போலீஸ் அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டார்.
ரவுடி வீடுகளில் சோதனை
இந்த நிலையில் புதுவை உருளையன்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரோடியர்பேட், ஆட்டுப்பட்டி, சின்ன கொசப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட ரவுடிகள் வீடுகளில் கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு தீபிகா போலீசாருடன் நேற்று இரவு திடீரென சோதனை நடத்தினார்.
அப்போது வெடிகுண்டுகள், ஆயுதங்கள் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் இருந்தனர். இதனால் அந்த பகுதிகளில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்