வால்பாறையில் தளவாட பொருட்களை மைல்கல்லில் வைத்து பூஜை செய்த சாலைப்பணியாளர்கள்
வால்பாறையில் தளவாட பொருட்களை மைல்கல்லில் வைத்து பூஜை செய்த சாலைப்பணியாளர்கள்
வால்பாறை
சாலை ஓரத்தில் கிலோ மீட்டரை தெரிந்து கொள்வதற்காக மைல்கல்கள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த மைல்கல் மற்றும் அதை சுற்றி புதர் இருந்தால் அவற்றை சாலைப்பணியாளர்கள் அகற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலை யில் புதுத்தோட்டம் என்ற பகுதியில் உள்ள மைல்கல்லில் நெடுஞ் சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் ஆயுதபூஜை கொண்டாடி னார்கள்.
அவர்கள், தாங்கள் அன்றாடம் பயன் படுத்தும் தளவாட பொருட்களை அங்கு வைத்து பூஜை செய்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.
இது குறித்து சாலைப்பணியாளர்கள் கூறும்போது, ஒவ்வொரு நாளும் மைல் கணக்கில் நடந்து சென்று சாலையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.
அதனால் தான் இந்த மைல்கல்லில் எங்களது அன்றாட பயன்பாட்டு தளவாட பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினோம் என்றனர்.