தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை
பழனி பகுதியில் வெவ்வேறு சம்பவங்களில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பழனி:
பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 37). கூலித்தொழிலாளி. குடும்ப பிரச்சினை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று ரமேஷ்குமார் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த அடிவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் பழனி டவுன் கண்ணகி சாலை பகுதியை சேர்ந்தவர் கருப்பாத்தாள் (75). வயது முதிர்வு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.