பாடங்களை எளிமையாக நடத்த தேவையான காணொலி மூலம் பதிவுசெய்யும் பணி
பாடங்களை எளிமையாக நடத்த தேவையான காணொலி மூலம் பதிவுசெய்யும் பணி
உடுமலை
பள்ளியில் மாணவர்களுக்கு பாடங்களை எளிமையாக நடத்த தேவையான காணொலி மூலம் பதிவுசெய்யும் பணி நடைபெற்றது.
காணொலியில் பாடங்கள்
உடுமலையை அடுத்து திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்பயிற்சி நிறுவனத்தின் சார்பில், தொடக்கப்பள்ளி, நடுநிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடங்களை எளிதா நடத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன்படி 3-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் குறைந்தது 10 கடினப்பகுதிகளை அடையாளம் கண்டு மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் காணொலிகளாக தயாரிக்கும் பணிக்கான பயிற்சி வகுப்பு இதுவாகும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
இந்த பணியில் 3-ம் வகுப்புக்கு 10 ஆசிரியர்கள், 10-ம் வகுப்புக்கு 10 ஆசிரியர்கள் என மொத்தம் 20 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில்செயல்பாடுகள் மூலம் கற்றல் விளைவுகளை எளிமையாக மாணவர்களிடம் அடையச்செய்யும் விதமாக காணொலிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
பயிற்சி வகுப்பில் காணொலிகளுக்கு உடுமலை அரசு கலைக்கல்லூரி, வித்யாசாகர் கலைமற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர்கல்லூரி ஆகிய கல்லூரிகளின் பேராசிரியர்கள் 10 பேர் அறிமுகவுரையை வழங்கினர்.
மாவட்ட ஆசிரியர்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் வீ. சங்கர் தலைமை தாங்கினார். முதுநிலை விரிவுரையாளர்கள் ம.சரவணக்குமார், எம்.பாபி இந்திரா, தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் கு.கண்ணபிரான் ஆகியோர் பேசினர். முடிவில் முதுநிலை விரிவுரையாளர் ஆ.சுப்பிரமணி நன்றி கூறினார்.