டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் 40 சதவீத தீபாவளி போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2021-10-27 16:11 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில், முள்ளிப்பாடியில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ராமு தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் சீனிவாசன், துணை தலைவர் மகாமுனி, மாநிலக்குழு உறுப்பினர் கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள், டாஸ்மாக் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அரசுக்கு பலகோடி வருமானம் ஈட்டித்தரும் டாஸ்டாக் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்குவது ஏற்புடையது அல்ல. எனவே தீபாவளிக்கு 40 சதவீத போனஸ் வழங்க வேண்டும். மேலும் 18 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். அதேபோல் தொழிற்சங்கங்களுடன் டாஸ்மாக் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்துவதோடு, ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

மேலும் செய்திகள்