லாலாபேட்டை அருகே ரவுடி கொலை: திருச்சி கோர்ட்டில் மேலும் 2 பேர் சரண்
லாலாபேட்டை அருகே ரவுடி கொலை வழக்கு தொடர்பாக மேலும் 2 பேர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
லாலாபேட்டை,
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள கருப்பத்தூரை சேர்ந்த பிரபல ரவுடியான தேவேந்திரகுல மக்கள் கட்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 52) என்பவர், கடந்த 6-ந் தேதி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ராஜபாண்டியன், சரவணக்குமார் இடையே பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட விரோதம் காரணமாக கொலை நடந்தது தெரியவந்தது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ரவுடி கோபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புடைய புதுச்சேரியை சேர்ந்த ரவிவர்மன் (23), சுந்தர் (33) ஆகிய 2 பேர், நேற்று திருச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை போலீஸ் காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.