தர்மபுரியில் என்ஜினீயர் தற்கொலை
தர்மபுரியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி செந்தில் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 22). என்ஜினீயரிங் படித்த இவர் வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவருடைய பெற்றோர் உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர். வீட்டில் இருந்த அருண்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.