முகநூலில் வீடியோ பதிவு செய்து சிலம்பம் பயிற்சியாளர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லை காரணமாக முகநூலில் வீடியோ பதிவு செய்து சிலம்பம் பயிற்சியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-26 19:07 GMT
நல்லூர்
கடன் தொல்லை காரணமாக முகநூலில் வீடியோ பதிவு செய்து  சிலம்பம் பயிற்சியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
சிலம்பம் பயிற்சியாளர்
கும்பகோணம் கிளப்பாளையம் ஆற்றுப்பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (வயது 28). சிலம்பம் பயிற்சியாளர். இவர் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு  பொள்ளாச்சியை சேர்ந்த மாலினியை (22) காதல் திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் இருவரும் திருப்பூர் காட்டுப்பாளையத்தில் வசித்து வந்தனர்.  இந்த நிலையில் மணிகண்டனுக்கு ரூ.3½  லட்சம் கடன் இருந்துள்ளது.  கடன்காரர்கள் போன் செய்து கடன் கேட்டதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையை மனைவி மாலினிக்கு தெரியாமல் வைத்திருந்த மணிகண்டன், அடிக்கடி தனியாக சென்று கடன்காரர்களிடம் போன் பேசி உள்ளார். இதனால் கணவன் வெளியே சென்று போன் பேசியதில் சந்தேகமடைந்த மனைவி மாலினி, கணவர் மணிகண்டனுக்கு வேறு யாருடனோ தொடர்பு இருப்பதாக நினைத்து நல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த தகவல் அறிந்த மணிகண்டன் விரக்தி அடைந்தார். 
தற்கொலை
இதனால் மனம் உடைந்த மணிகண்டன் தனது வீட்டின் அருகில் வசித்து வந்த மாமியாரின் வீட்டிற்குள் காம்பவுண்டு சுவர் ஏறி  உள்ளே குதித்துள்ளார். பின்னர்  தனது செல்போனில் முகநூல் பக்கத்தை லைவ்வில் வீடியோ பதிவு செய்து கொண்டே தூக்கில் தொங்கினார்.  இந்த வீடியோவை பக்கத்து வீட்டில் இருக்கும் மூதாட்டி பார்த்துவிட்டு, கூச்சல் போட்டு பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து அவரை காப்பாற்றும்படி கூறியுள்ளார். உடனே அருகில் உள்ளவர்கள் ஓடி சென்று மணிகண்டனை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார். இந்த சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முகநூலில் வீடியோ பதிவு செய்து விட்டு, மாமியார் வீட்டில் சிலம்பம் மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிலம்பம் மாஸ்டார் தற்கொலை செய்து கொண்ட முகநூல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் செய்திகள்