கரூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கரூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். புதிதாக 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர்,
19 பேருக்கு தொற்று
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஒருவர் பலி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் குணமடைந்து உள்ளனர். அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
தற்போது 177 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.