ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

14-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-26 18:37 GMT
கரூர், 
ஆர்ப்பாட்டம்
கரூர் திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மண்டல துணை பொதுச்செயலாளர் பூபதி தலைமை தாங்கினார்.
இதில் மண்டல கவுரவ தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் செல்வராஜ், பொருளாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தீபாவளி பண்டிகை முன்பணம், போனஸ் வழங்காததை கண்டித்தும், 14-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரியும், போக்குவரத்து கழகத்தில் உள்ள கூட்டுக்குழு சங்கத்தை அழைத்து பேசாமல் தன்னிச்சையாக அறிவித்த 10 சதவீத போனசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்