புது துணி பிடிக்காததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தீபாவளிக்கு கணவர் எடுத்துக்கொடுத்த புது துணி பிடிக்காததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நல்லூர்
தீபாவளிக்கு கணவர் எடுத்துக்கொடுத்த புது துணி பிடிக்காததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளம்பெண்
மதுரை மாவட்டம் மேலூர் பூத மங்களம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மருதுபாண்டியன். இவருடைய ம மனைவி ராணி (வயது 21). தம்பதியினருக்கு திருமணம் ஆகி 2½ ஆண்டு ஆகிறது. இவர்கள் 2 பேரும் திருப்பூர் பள்ளக்காட்டு புதூரில் வசித்து வருகின்றனர். மருதுபாண்டியன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது மனைவிக்கு தீபாவளி பண்டிகைக்கு புது துணி வாங்க ஜவுளி கடைக்கு சென்றார். அங்கு மனைவிக்கு ஆசை ஆசையாய் கொடுக்க புதுத்துணி எடுத்துள்ளார். பின்னர் அந்த துணியை கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்துள்ளார். புத்துணியை பார்த்ததும் மனைவி சந்தோஷம் அடைவார் என மருதுபாண்டியன் நினைத்தார். ஆனால் அவர் எடுத்து கொடுத்த புதுத்துணி ராணிக்கு பிடிக்கவில்லை.
இதனால் இருவருக்கும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதன் கோபமடைந்த ராணி கடந்த 24-ம் தேதி இரவு வீட்டில் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உடனே அக்கம்பத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சாவு
அங்கு சிகிச்சை பெற்று வந்த ராணி நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி நடத்தினார். தீபாவளி புதுத்துணி பிடிக்காததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.