இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில் நகைகளை உருக்குவதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் எதிரே தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில், கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகளை உருக்கும் தமிழக அரசின் நிலைபாட்டை கண்டித்தும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விநாயகர் மற்றும் முருகர் தேர்களில் உள்ள அச்சாணிகள் திருட்டுபோனதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட செயலாளர்கள் கவுதம், சிவா, பா.ஜ.க. கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன், இந்து முன்னணி நகர பொதுச்செயலாளர் மஞ்சுநாதன் உள்பட இந்து முன்னணி, பா.ஜ.க., விசுவ இந்து பரிஷத் நிர்வாகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.