4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம் கூடுதல் இழப்பீடு வழங்க கோரிக்கை
கூடுதல் இழப்பீடு வழங்க கோரி 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வளவனூர்,
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே 4 வழிச்சாலை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் விழுப்புரம் ஜானகிபுரம் முதல் வளவனூர் அருகே உள்ள கெங்கராம்பாளையம் வரை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான இழப்பீட்டு தொகை கூடுதலாக வழங்கக் கோரி அற்பிசம்பாளையம், சாலையாம்பாளையம் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று அந்த பகுதியில் நடந்த 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் கலெக்டரிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.