விதிகளை மீறி கட்டிய 16 வீடுகள் இடிப்பு
விதிகளை மீறி கட்டிய 16 வீடுகள் இடிப்பு
குன்னூர்
குன்னூர் வெலிங்டன் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்ட 16 வீடுகள் இடிக்கப்பட்டன.
16 வீடுகள் இடிப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் கன்டோன்மெண்ட் நிர்வாகம் இயங்கி வருகிறது. நிர்வாகத்தின் சீழ் 7 வார்டுகள் உள்ளன. ராணுவ முகாமை ஒட்டியுள்ள பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை கன்டோன்மெண்ட் நிர்வாகம் நிர்வகித்து வருகிறது. 7 வார்டுகளிலும் பொதுமக்கள் கட்டிடங்கள் கட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. விதிமுறைகளை மீறிய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று விதிகளை மீறிய 16 வீடுகளை இடிக்கும் பணி கொட்டும் மழையில் நடைபெற்றது. இந்தப்பணியில் பொக்லைன் எந்திரம் பயன்படுத்தப்பட்டது.
போலீ்ஸ் குவிப்பு
அப்போது அங்கு பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வீடு இடிக்கப்படும் போது சில இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சமரசம் பேசினர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, நீதிமன்ற உத்தரவின் பேரிலும், பூனாவில் உள்ள தலைமையக வழிகாட்டுதல்படியும் விதிகளை மீறிய விடுகள் இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது என்றனர்.