திருவள்ளூரில் பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

திருவள்ளூரில் பெண்ணை தாக்கிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்.

Update: 2021-10-26 08:01 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பொம்மராஜூபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மோட்ச லிங்கம் (வயது 55). இவருடைய மனைவி மல்லீஸ்வரி (49). இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஹேமா சலம் (40), இவரது மனைவி ராணி (35). இவர்களுடன் ஹேமாசலத்தின் தம்பி தனசேகர் (32) என்பவரும் வசித்து வருகிறார். நேற்று மல்லீஸ்வரி தனது வீட்டின் முன் செல்லும் கழிவு நீர் கால்வாயில் இருந்து மண்ணை எடுத்து வெளியே போட்டதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக மல்லீஸ்வரிக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ராணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தனது அண்ணிக்கு சாதகமாக தனசேகர் தகராறு செய்தார். இதில் ராணியும், தனசேகரனும் சேர்ந்து மல்லீஸ்வரியை கைகளால் தாக்கி காயப்படுத்தினார்கள்.

இது குறித்து மல்லீஸ்வரி பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்குப்பதிவு செய்து ராணி, தனசேகர் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்