ஆத்தூர் அருகே ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு-சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஆத்தூர் அருகே ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-10-25 22:08 GMT
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே கல்லாநத்தம் கிராமத்திற்கு வடக்கே சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி. இங்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைவாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் தினமும் குளித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கல்வராயன் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மலைப்பகுதியில் இருந்து மரங்கள், கற்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துக்கொண்டு வருகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும் செய்திகள்