கோபி அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை-மனைவி பிரிந்த துயரத்தில் விபரீத முடிவு
கோபி அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடத்தூர்
கோபி அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை மனைவி பிரிந்து சென்ற துயரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மனைவி பிரிந்து சென்றார்
கோபி அருகே உள்ள நஞ்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 37). இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். ஆனந்தராஜ் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர் 2 பேரும் நஞ்சகவுண்டன்பாளையத்தில் வசித்து வந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆனந்தராஜின் மனைவி கோபித்துக்கொண்டு் தன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்து காணப்பட்ட ஆனந்தராஜ் ஏற்கனவே 2 முறை தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அவரை உறவினர்கள் காப்பாற்றியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆனந்தராஜ் வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு் கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனே மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, ஆனந்தராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.