ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் உற்சாக குளியல்

ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் உற்சாக குளியல்

Update: 2021-10-25 19:35 GMT
திருச்சி, அக்.26-
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டாள், லட்சுமி ஆகிய 2 யானைகள் உள்ளன. இந்த யானைகள் குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் கோவிலுக்கு சொந்தமான உடையவர் தோப்பில் 56 அடிநீளம், 56 அடி அகலம் மற்றும் 6.5 அடி உயரத்தில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீச்சல் குளம் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது.
இந்த குளத்துக்கு நேற்று காலை கோவில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் சிறப்பு பூஜை செய்தார். அதன்பிறகு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில், கோவில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகியவற்றை நீச்சல் குளத்தில் இறக்கி குளிக்க வைத்து பார்க்கப்பட்டது. அப்போது 2 யானைகளும் உற்சாகமாக நீச்சல் குளத்தில் இறங்கி தண்ணீரில் படுத்து குளித்து மகிழ்ந்தன. இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், மேலாளர் உமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்