மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு
மாட்டு வண்டியில் இருந்து கீழே விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரனின் மகன் அருண் (வயது 25). இவர் வங்காரம் பகுதியில் உள்ள ஆனைவாரி ஓடையில் மணல் அள்ளிக்கொண்டு தனது டயர் மாட்டு வண்டியில் வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த அவர் மாட்டு வண்டி டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.