லாரி மோதி விவசாயி உடல் நசுங்கி பலி

லாரி மோதி விவசாயி உடல் நசுங்கி உயிரிழந்தார்.

Update: 2021-10-25 19:35 GMT
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கோரியம்பட்டி கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் முருகேசன்(வயது 70). விவசாயியான இவர் வாழைத்தண்டு வியாபாரி ஆவார். நேற்று இவர் இலையூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த சிமெண்டு கலவை லாரி சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் முன்பக்க சக்கரம் ஏரி இறங்கியதில் முருகேசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் லாரி டிரைவர் தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூர் பாபநாசம் கல்லடி தெருவை சேர்ந்த மணிமாறன்(30) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்