உப்பிலியபுரம்,அக்.26-
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் தொடர் மழை காரணமாக அய்யாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்தநிலையில் உப்பிலியபுரம் அருகே புதுப்பட்டி, தேவேந்திரர்குல தெருவை சேர்ந்த பெரியசாமி (வயது 42) என்ற விவசாயிக்கு சொந்தமான பசு மாடு அய்யாற்றில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, பசுமாடு அய்யாற்றில் தண்ணீர் குடிக்க முயன்றபோது, தவறி விழுந்தது. வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பசுமாடு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதை யாரும் கவனிக்காததால் பசுமாடு செத்தது. இந்தநிலையில் எரகுடி அருகே இறந்த நிலையில் பசுமாடு கரை ஒதுக்கியது. இறந்த பசுமாட்டின் மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும். எரகுடி கால்நடை மருத்துவர் ஆனந்த் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே பரிசோதனை செய்து புதைத்தனர்.