சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி

காரியாபட்டி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-10-25 18:38 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
சேதமடைந்த சாலை 
காரியாபட்டி தாலுகா, முடுக்கன்குளம் கிராமத்திலிருந்து புல்வாய்க்கரை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.  முடுக்கன்குளம் கிராமத்திலிருந்து புல்வாய்க்கரை கிராமத்திற்கு செல்லும் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த சாலையில் தினமும் பல்வேறு கனரக வாகனங்கள் சென்று வருவதால் சாலையில் உள்ள ஜல்லி கற்கள் முழுவதும் பெயர்ந்து இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலைக்கு மாறிவிட்டது. இந்த பகுதியில் ஏராளமான ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். 
நடவடிக்கை 
விவசாய பொருட்களையும், உரங்களையும் இந்த சாலை வழியாக எடுத்து செல்ல முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். 
அதேபோல சாலையின்  இருபுறங்களிலும் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன.
எனவே போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்பதுடன், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்