ரெயிலில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல். பெண்கள் உள்பட 4 பேர் கைது

ரெயிலில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2021-10-25 16:28 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது நடைமேடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் மெமு பாசஞ்சர் ரெயிலில் ஏற்றியபோது, போலீசார் விரைந்து வந்துது 3 பெண்கள் உள்பட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

கைதானவர்கள் ஜோலார்பேட்டைைய அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 26), நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பாறையூர் பகுதியைச் சேர்ந்த ஜெயா (36), நாட்டறம்பள்ளி அருகே திருஆலம் பகுதியைச் சேர்ந்த சசிகலா (61), ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த பூங்கொடி (37) எனத் தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்