வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு
முத்தரசநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் திருட்டு போயின.
ஜீயபுரம்
திருச்சி முத்தரசநல்லூர் அருகே உள்ள முருங்கப்பேட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 60). இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த 14-ந் தேதி திருப்பூருக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தன. இதுகுறித்து ஜீயபுரம் போலீசில் கனகராஜ் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.