டிராக்டர் மோதி கல்லூரி மாணவர் சாவு

டிராக்டர் மோதி கல்லூரி மாணவர் இறந்தார்.

Update: 2021-10-24 19:54 GMT
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த முருகேசனின் மகன் தினேஷ்(வயது 20). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் தினேஷ் மற்றும் அவரது நண்பர் ஆறுமுகம் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அங்கனூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். குழுமூர் அரசு காப்புக்காடு பகுதியில் சென்றபோது அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்து சாலையைக் கடக்க முயன்ற டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தினேஷ், ஆறுமுகம் ஆகியோர் படுகாயமடைந்தனர். உறவினர்கள் அவர்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினேஷ் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுமுகம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவர் ரவியை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்