கல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்; டிரைவர் கைது
நெல்லையில் அனுமதியின்றி கல் ஏற்றி வந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக டிரைவரையும் கைது செய்தனர்.
நெல்லை:
கங்கைகொண்டான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் நான்கு வழி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த ஒரு டிப்பர் லாரியை வழிமறித்து சோதனை செய்த போது, அதில் கல் இருந்தது தெரியவந்தது.
உடனே போலீசார் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மானூரை சேர்ந்த கார்த்திக் ராஜா (வயது 30) என்பதும், உரிய அனுமதியின்றி லாரியில் கல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் கார்த்திக் ராஜாவை கைது செய்து, கல்லை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.