போக்சோவில் முதியவர் கைது
ஆண்டிப்பட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள குன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைத்துரை (வயது 60). இவர், 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவரது பெற்றோர், ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெள்ளைத்துரையை கைது செய்தனர்.