தம்பியை பாட்டிலால் குத்தி கொன்ற தொழிலாளி கைது
வேதாரண்யம் அருகே தம்பியை பாட்டிலால் குத்தி கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே தம்பியை பாட்டிலால் குத்தி கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோதம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செம்போடை மேற்கு பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் (வயது38). இவருடைய அண்ணன் தமிழ்ச்செல்வன் (43). தொழிலாளி. இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று முன்விரோதம் காரணமாக தம்பி பிரகாசத்தை அண்ணன் தமிழ்ச்செல்வன் பாட்டிலால் குத்தி உள்ளார்.
சாவு
இதில் படுகாயம் அடைந்த பிரகாசத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாசம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச் செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.