மின்னல் தாக்கி பசுமாடு பலி

மின்னல் தாக்கி பசுமாடு பலி

Update: 2021-10-24 16:41 GMT
அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த செம்பேடுமதுரா சோகனூர் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளி. இவருக்கு சொந்தமான பசுமாடு நேற்று மாலை பெருமாள் ராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது பயங்கர இடி, மின்னலுடன் மழை பெய்தது. நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேேய துடி துடித்து இறந்தது.

சம்பவத்தைக் கேள்விப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் தணிகாசலம் கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த கால்நடை டாக்டர், பசுமாட்டை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் மற்றும் அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்