மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு. வாலிபர் கைது

மனைவிக்கு சரமாரி அரிவாள் வெட்டு

Update: 2021-10-24 14:14 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிட்டு (வயது 27), கூலித்தொழிலாளி. இவரின் மனைவி மஞ்சுளா (22), அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடும், இதனால் தகராறும் ஏற்பட்டுவந்ததால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

ஆத்திரத்தில் இருந்து வந்த கிட்டு நேற்று  வாணியம்பாடி மேட்டுபாளையம் மேம்பாலம் அருகே பாலாற்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த மனைவி மஞ்சுளாவிடம் சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மஞ்சுளாவின் தலை, நெற்றி, கை மற்றும் கால்களில் சரமாரியாக வெட்டினார். அவரை, தடுக்க வந்த காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வி (45) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் கிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். 

அதில் படுகாயம் அடைந்த மஞ்சுளா, செல்வியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, இருவருக்கும் முதலுதவி அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுபற்றி தகவல் அறிந்ததும் வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய கிட்டுவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்