குடும்ப பிரச்சினை: ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே குடும்ப பிரச்சினையில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-24 10:18 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பெரவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு தேவன் (வயது 45). ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மனைவிகள். ஒரே குடும்பத்தில் அக்கா, தங்கையை திருமணம் செய்து கொண்டார்.

குடும்ப பிரச்சினை காரணமாக இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள மரத்தில் புடவையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் அன்புதேவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்